வெள்ளி, டிசம்பர் 31, 2010

படையப்பா - திரை விமர்சனம்

பொதுவாகவே ஒரு திரைப்படத்திற்கு மிக முக்கியமானது கதை. எந்த நடிகருமே படத்தின் கதை என்ன என்று கேட்பார்களே தவிர, திரைக்கதை என்ன என்று கேட்க மாட்டார்கள். திரைக்கதை சுமாராக இருந்து கதை அருமையாக இருந்தாலும், அந்த படம் தோல்வி படம் தான். ஆனால் அதே சமயம் கதை ஒன்றுமே இல்லாமல் இருந்து, திரைக்கதை அருமையாக அமைத்து விட்டால்,
அதுவும் 'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்' என்ற மாபெரும் நடிகர் அந்த படத்திற்கு கதாநாயகனாக அமைந்துவிட்டால்? படத்தின் ஆரம்பத்திலேயே தெரிந்து விடும் இந்த படம் Block Buster என்று. அப்படி வந்த ஒரே படம் தான் தலைவர் நடித்த 'படையப்பா'.
'அதிகமா ஆசைபடுற ஆம்பிளையும், அதிகமா கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே கெடையாது'. இந்த ரெண்டு வரி தான் படத்தின் One Line Story. இந்த ரெண்டு வரியை வைத்துக்கொண்டு திரைக்கதையில் புகுந்து விளையாடி இருக்கிறார் திரு K.S.ரவிக்குமார். சூப்பர் ஸ்டாரை பற்றி சொல்ல வேண்டுமென்றால் ஒரு சம்பவத்தை பற்றி இங்கே குறிப்பிட விரும்புகிறேன். படையப்பா படபிடிப்பின் போது ஒரு முறை ரவிக்குமார், ரஜினியிடம் இப்படி சொன்னாராம் 'படத்துல நிலாம்பரி ரோல் ஆதிக்கம் ஜாஸ்தியா இருக்கு. அதனால அந்த Charcter Scenes கொஞ்சம் குறைசிடலாம்னு இருக்கேன்' என்றார். அதற்கு தலைவர் 'நீங்க எதையும் பண்ணாதிங்க. ஸ்கிரிப்ட்ல என்ன இருக்கோ, அதையே எடுங்க. மத்தத என் வசனத்த வச்சி நான் Manage பண்ணிக்கிறேன்' என்றார். தலைவர், நிலாம்பரியை வசனதாலேயே Manage பண்ணாரா இல்லையா என்று படையப்பா பார்த்த சின்ன குழந்தை கூட சொல்லும்.
இந்த படத்தில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. முதலில் உள்ள சிறப்பம்சம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சிவாஜி வழக்கம் போல தன் அக்மார்க் நடிப்பில் அசத்துகிறார். தம்பியான மணிவண்ணனிடம் சொத்துக்களை கொடுத்து விட்டு ரஜினியிடம் 'இனிமே நாங்க எல்லாரும் உன் பின்னாடிதாம்பா' என்று சொல்லுவார். அதற்கு ரஜினி 'எப்பவுமே நீங்க தாம்பா எங்களுக்கு முன்னோடி' என்று சொல்லுவார். உண்மையிலேயே நான் ரசித்த, நெகிழ்வான வசனம் அது.
'நீலாம்பரியாக' ரம்யா கிருஷ்ணன் அருமையான தேர்வு. நடை, பேச்சு, திமிர் பார்வை என்று படம் முழுக்க ரஜினிக்கு நிகராக கலக்குகிறார். முக்கியமாக ரஜினிக்கே அவர் ஸ்டைலில் Salute அடித்து காட்டுவது செம ஜோர். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை நீலாம்பரியின் கதாபாத்திரத்தின் Tempo கொஞ்சம் கூட குறையாமல் காட்டியிருப்பது வழக்கமான ரஜினி படங்களுக்கே புதுசு.
வசுந்தராவாக சௌந்தர்யா. தென்னிந்தியா தவறவிட்ட அழகான, அருமையான நடிகை. இதில் அவருக்கு பெரிதாக காட்சிகளும், வசனங்களும் இல்லையென்றாலும், ரஜினிக்கு ஜோடியாக வருகிறார். அதுவே போதும் இல்லையா? 'சுத்தி சுத்தி வந்திக' பாடலில் இவரின் அழகு மிளிர்கிறது. We Really Miss You சௌந்தர்யா.
படத்தில் காமெடி காட்சிகள் என்று பார்த்தால், செந்திலுக்கு பெண் பார்க்க போகும் இடத்தில் 'மாப்பிள்ளை இவர் தான், ஆனா அவர் போட்டிருக்கற Dress எனது' என்று ரஜினி சொல்லும் வசனம் இன்றைய தேதி வரை பிரபலம். படத்தில் வசனங்கள் ஒவ்வொன்றும் Super. இதில் எனக்கு பிடித்த வசனம் 'கஷ்டபடாம எதுவும் கிடைக்காது. அப்படி கஷ்டபடாம கெடச்சது என்னைக்கும் நிலைக்காது'. மிகவும் எதார்த்தமான வசனம் இது. சண்டை காட்சிகள் கனல் கண்ணன் மிக அருமையாக செய்திருக்கிறார். படத்திற்கு இசை நம் ஆஸ்கார் நாயகன். எனக்கு படத்தின் பாடல்களை விட பின்னணி இசை தான் மிகவும் கவர்ந்தது.
இந்த படம் ஏப்ரல் 1, 1999 அன்று வெளிவந்தது. படத்தின் மொத்த Budget 23 கோடி. வசூல் செய்ததோ 43 கோடி. நான் இந்த படத்தை பூந்தமல்லி சுந்தர் திரையரங்கில் பார்த்தேன். எனக்கு அப்போது 15 வயசு. இனியும் இப்படி ஒரு படம் வருமா என்று கேட்டால், அதற்கு என் பதில் கண்டிப்பாக வராது தான். Because இந்த படம் 'நரசிம்மா' என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகி சக்கை போடு போட்டு, ஒரு Trend Setter ஆனது. இன்றைய நிலைமை என்னவென்றால் தெலுங்கில் வெற்றி பெற்ற Trend Setter படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார்கள் நம் ஹீரோக்கள். என்ன சொல்வது?


(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்).

4 கருத்துகள்:

  1. மிக நன்றாய் கூறினீர்கள் நண்பரே! தலைவர் இந்த படத்தில் சொல்லிய வசனம் அனைவரின் வாழ்க்கைக்கும் பொருந்தும். உங்களின் விமர்சனமும் மிக அருமையாய் இருந்தது. நன்றி!

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா10 அக்டோபர், 2023 20:30

    Full movie thalaivarism.

    பதிலளிநீக்கு