திங்கள், டிசம்பர் 08, 2014

இது விஜய் ரசிகர்களுக்கு அல்ல...

 இளையதளபதி விஜய், தமிழ் திரையுலகிற்கு வந்து 22 ஆண்டுகள் ஆகி விட்டது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், ஏராளமான ரசிகர் கூட்டம் என்று பெரிய ஸ்டார் ஆக இருக்கும் இவரை பற்றிய ஒரு பதிவு இது. இந்த பதிவு, விஜயின் ஏற்ற தாழ்வுகள், அரசியல் போன்றவற்றை அலசும் பதிவு. என்ன தான் நான் சரியாக எழுதினாலும், 'இது ஒரு அஜித் ரசிகர் எழுதிய பதிவு' என்றே பார்க்கப்படும். அதனால் தான், டைட்டிலை இப்படி எழுதினேன். சரி, இனி விஷயத்திற்கு வருவோம்.


1992 ஆம் ஆண்டு விஜய் தன் முதல் படத்தில் அறிமுகமானபோது விஜய்க்கு பெரிதாக போட்டி என்று யாரும் இல்லை. எஸ்.ஏ. சந்திரசேகர் ஒரு தந்தையாகவும், இயக்குனராகவும் விஜய்க்கு ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பே 'நாளைய தீர்ப்பு'. குழந்தை நட்சத்திரமாக ஏற்கனவே தந்தையின் இயக்கத்தில் நடித்திருந்தாலும், ஹீரோவாக அறிமுகமான விஜய்க்கு தொடர்ந்து எந்த வாய்ப்பும் வரவில்லை. மகனை பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே எஸ்.ஏ.சி அவர்கள் தொடர்ந்து விஜயை வைத்து படங்களை எடுத்தார். அப்போதைய சூழ்நிலையில் பெரிதாக ஹிட் படங்கள் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருந்த விஜய்க்கு, பட்டிதொட்டி எங்கும் பெயர் பெற்று தந்த படம் 'பூவே உனக்காக'. இந்த படத்திற்கு பிறகு விஜய் நடித்த பெரும்பாலான படங்கள், காதல் திரைப்படங்கள். அதனாலேயே 'Lover Boy' என்று இமேஜை விஜய் விரும்பி ஏற்றுக் கொண்டார்.
 தமிழ் சினிமாவில் முதன்முதலில் 'கமர்ஷியல்' பாதையை அமைத்தது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். 'மக்கள் கவலைகளை மறக்கத்தான் திரையரங்கிற்கு வருகிறார்கள். அவர்களுக்குத் தேவை, பொழுதுபோக்குத் திரைப்படங்கள் தான்' என்று ரசிகனின் நாடித் துடிப்பை தெரிந்து வைத்திருந்தார் 'வாத்தியார்'. புரட்சித் தலைவருக்கு பின் அந்த பாதையை மேம்படுத்தியவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சிறந்த கதைகள், வித்தியாசமான கதாபாத்திரங்கள் என்று ரஜினிகாந்த் கலக்கினாலும், கிளாசிக் திரைப்படங்களில் நடிப்பதையும் நிறுத்தவில்லை ரஜினி. ரஜினியின் ஆரம்ப காலங்களில் அவரின் நடிப்புத் திறமையை வெளிக்கொண்டு வந்தது, இது போன்ற கிளாஸிக் திரைப்படங்கள் தான். ஆனால் அவரின் ரசிகர்களும், தயாரிப்பாளர்களும் ரஜினியை கமர்ஷியல் ஹீரோவாகவே பார்க்க விரும்பினர்.

இதை எதற்க்காக சொல்கிறேன் என்றால், இன்று வரைக்கும் விஜய் தொடர்ந்து நடித்த படங்கள் அனைத்தும் கமர்ஷியல் திரைப்படங்கள். இன்னும் எத்தனை நாளைக்கு இந்த ரூட் அவருக்கு கை கொடுக்கும் என்று தெரியவில்லை. Because, இது போன்ற Light-Weighted கதைகளைத் தாண்டி விஜயால் நடிப்பு சம்பந்தப்பட்ட கதைகளில் நடிக்க அவருக்கு வராது என்றே பலரும் சொல்கிறார்கள். அதே சமயம், தன்னுடைய திரைப் பயணத்தில் Character Roles என்று சொல்லிக்கொள்ளும்படியாக விஜய் இதுவரை ஒரு படத்தில் கூட முயற்சிக்கவில்லை என்பதே உண்மை. இனியாவது கொஞ்சம் நடிப்பு சம்பந்தப்பட்ட கதைகளில் விஜய் நடித்தால், தொடர்ந்து சினிமாவில் தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பதே என் எண்ணம்.

விஜய் இதுவரை கிட்டத்தட்ட 15 ரீமேக் படங்களில் நடித்திருக்கிறார். கண்டிப்பாக இந்த விஷயத்தில் இவர் ரஜினிக்கு அடுத்து அதிகமான ரீமேக் படங்களில் நடித்த பெருமை இவரையே சாரும். ஆனால், ரஜினி நடித்த ரீமேக் படங்களால் மட்டும் அவர் உயர்ந்த இடத்தை அடையவில்லை. அவையும் அவர் ஏறிய வெற்றிப்படிக்கட்டுகளின் ஓர் பாகம் தான்.ஆனால் விஜய்க்கு? விஜய் படங்களை சற்று உன்னிப்பாக கவனித்தால் நமக்கு ஒரு விஷயம் புலப்படும். அதாவது, விஜய் படத்தின் இயக்குனர், நடிகை, காமெடியன், வில்லன், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என்று அன்றைய சூழ்நிலையில் உச்சத்தில் இருப்பவர்களுடன் மட்டுமே அவர் படம் பண்ணுவார். காரணம், படம் ஒரு வேளை தோல்வியைத் தழுவப் பார்த்தாலும், கூட நடிப்பவர்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் அதை வெற்றிப் படமாக்கி விடலாம் என்ற ஒரு எண்ணம். ஆனால் இது ஒரு சில படங்களில் நடந்திருக்கலாம். அனைத்துப் படங்களுக்கும் எப்படி இது சாத்தியமாகும்? ஒரு படத்தின் மாஸ் ஹீரோ என்று சொல்லிக்கொள்பவர் தானே மொத்தப் படத்தையும் தன் தோளில் தாங்க வேண்டும்?
 இந்தப் பதிவில், இதுவரைக்கும் விஜயை நான் எம்.ஜி.யாரோடும், ரஜினியோடும் ஒப்பிட்டு வந்திருக்கிறேன். அதற்க்குக் காரணம் என்ன? 'விஜய்' தான் காரணம்.விஜயின் நண்பன், வேலாயுதம் போன்ற படங்கள் வெளியான சமயங்களில், அந்த படத்தின் வசூலை எந்திரன் படத்தின் வசூலோடு ஒப்பிட்டு பிரஸ் மீட்டில் பேசினார், அதுவும் எந்த ஆதாரமும் இல்லாமல். ஒரு முன்னணி நடிகர் ஏன் இது போன்ற 'Cheap Publicity' செய்தார் என்பது தான் இன்னும் புரியவில்லை. இதே விஜய் தான், தான் வளர்ந்து வந்த காலகட்டத்தில், 'ரஜினி சார் தான் என் ஹீரோ. அவரை பார்த்து தான் நான் சினிமாவில் ஹீரோ ஆகணும்னு நான் ஆசைப்பட்டேன்' என்று சொன்னவர். இன்று 'நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்' என்ற ரீதியில் செயல்படுவது, நகைப்புக்குரியதாகிறது. 'அடுத்த சூப்பர் ஸ்டார் யாரு? எங்க 'தளபதி' விஜய் தான்' என்று அவரின் ரசிகர்கள் சொல்லும்போது, 'சிவாஜி' படத்தில் ரஜினி பேசிய வசனமான 'எத்தன தடவ டா இதே கேள்விய கேப்பிங்க?' என்பது தான் எனக்கு ஞாபகம் வருகிறது.

இன்று விஜய் ரசிகர்கள், விஜய்யை விட ஒரு படி மேலே இருக்கிறார்கள். எதில் தெரியுமா? தங்களுடைய தளபதியை கலாய்ப்பதில். அதுவும் 'Face Book' போன்ற சமூக வலைதளங்களில் இவர்களின் அக்கப்போர் தாங்கமுடியவில்லை. 'பாட்ஷா' ரஜினியுடன் 'தலைவா' விஜய்யை ஒப்பிட்டு, 'Who is மாஸ்? என்று கேட்கிறார்கள். அட இது கூட பரவாயில்லை. கோபம் வருவது போல அவர்கள் காமெடி பண்ணினாலும் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் சிம்புவோடு விஜய்யை ஒப்பிட்டு 'who is Best Dancer?' என்று கேட்பதெல்லாம் விஜயின் நடனத்தை ரசிக்கும் அஜித் ரசிகனான என்னாலேயே பொறுத்துக் கொள்ள முடியாத விஷயம். இன்றைக்கும் ஏதாவது ஒரு நடிகரோடு விஜய்யை compare செய்வதையே வேலையாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். அதே போல விஜய்க்கு ரசிகர்களை விட ரசிகைகளே அதிகம் என்று இன்றும் சிலர் பரவலாக சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்குத் தெரிந்து விஜய்க்கு இருந்த 'ரசிகைகள் பட்டாளம்' எல்லாம் வழக்கொழிந்து பலகாலமாகிவிட்டது. அன்று 'விஜய்' என்று சொன்ன பல பெண்கள், இன்று 'சூர்யா, மாதவன், ஆர்யா' என்று மாறிவிட்டார்கள். குழந்தை ரசிகர்களும் அப்படித்தான்.அவர்களும் 'சிவகார்த்திகேயன் ரசிகர்களாக மாறிப் போய் பல நாட்கள் ஆகிவிட்டது (இதை இளையதளபதியே விஜய் டிவியில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது).
சினிமாவை தாண்டி சமூக அக்கறை உள்ளவர் விஜய் என்று பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். நல்ல விஷயம் தான். ஆனால் அதை விளம்பரப்படுத்துவதிலும் அக்கறை உள்ளவர் விஜய் என்பதும் மறுப்பதற்கில்லை. டிவி, பத்திரிக்கை என்று எல்லாவற்றிலும் விளம்பரம் தேடுபவராகவே இருந்திருக்கிறார் அவர். 'காவலன்' பிரஸ் மீட்டுக்கு கூப்பிட்டால், 'ஏழைகளுக்கு அரிசி கொடுத்தால் தான் வருவேன்' என்று தயாரிப்பாளரிடம் சொன்னது, 'வேலாயுதம்' படத்தின் இசை வெளியிட்டு விழாவில் ஆடு, மாடுகளை வழங்கியது,இவர் நடத்திய இலவச திருமணம் நிகழ்ச்சியில் இவரின் ரசிகர்களையே எதிர்கொள்ள பயந்து பின்வழியாக ஓடியது என்று இவர் திரைக்கு வெளியே செய்த காமெடி கூத்துகள் ஏராளம். ஆனால் இது போன்ற ஒரு 'ரியல் நடிகரை' அடையாளம் கண்டு கொண்ட ரசிகர்கள் வந்து பலகாலமாகிவிட்டது.

சில வருடங்களாகவே நடிகர் விஜய்க்கு அரசியல் ஆசை மேலோங்கி இருக்கிறது. இந்த ஆசை வரக் காரணம், விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்.தான். மகனை எப்படியாவது அரசியலில் ஈடுபடுத்தி வெற்றி பெற வைக்க வேண்டுமென்பது அவரது நீண்டநாள் ஆசை. எந்த ஒரு தகப்பனாக இருந்தாலும் தன் பிள்ளை தன்னை விட பெரிய ஆளாக வேண்டும் என்றே நினைப்பான். அதில் தவறில்லை. ஆனால் ஒரு நடிகன் நாடாள வேண்டும் என்று வரும்போது முதலில் அதற்க்கு என்னென்ன தகுதிகள் தனக்கு இருக்கிறது என்பதை கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். தன் படங்களை ஓட வைப்பதற்காக 'அரசியலுக்கு வருவேன்' என்று சொல்வது சுத்த முட்டாள்தனம். விஜயும் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், இப்போது பி.ஜே.பி என்று பம்பரமாக அணிமாறும் போது அவரை நினைத்து பரிதாபப்படுவதா இல்லை சிரிப்பதா என்று தான் தெரியவில்லை. இப்போதைய சூழ்நிலையில், விஜயின் நலம் விரும்பியாகவும், சினிமா ரசிகனாகவும் அவரிடமிருந்து எதிர்ப்பார்ப்பது நல்ல திரைப்படங்களும், சிறந்த நடிப்பையும் மட்டும் தான். இப்படி எதிர்பார்ப்பது போலவே, சமீப காலமாக விஜய் தனது வேலையை அமைதியாக செய்து கொண்டிருக்கிறார். இப்படி அவர் தொடர்ந்து செய்துகொண்டிருந்தாலே போதும், என்றென்றும் அவர் தமிழ் சினிமாவின் 'இளைய தளபதியாகவே' இருப்பார்....




Thanks and Regards

6 கருத்துகள்:

  1. ஏந்தான் நடிக்க தெரியாத விஜயிடம் அதை எதிர்பார்க்குறாங்கன்னு புரியவே இல்லை. நல்லா நடிக்கிற கமல், தனுஷ், விக்ரம்னு எவ்ளோபேரு இருக்காங்க? அவங்க படம் பாத்துட்டு போங்க.. :))

    இதெல்லாம் செஞ்சா எப்பவும் இளைய தளபதியா இருப்பாராம்.. :))) இது எதுவுமே செய்யாமதான் அவர் இந்த நிலைமைக்கு வந்திருக்காரு..

    விஜயை பிடிக்காதவங்க / விஜய் படங்கள் பிடிக்காதவங்களுக்கு தமிழ் சினிமால ஆயிரம் ஆப்ஷன் ஸ் இருக்கு. எதுக்கு இந்த அரைவேக்காட்டு நடிகரையே புடிச்சிட்டு தொங்கணும்?????

    //நல்ல திரைப்படங்களும், சிறந்த நடிப்பையும் மட்டும் தான்//
    :))).. வராது சார். வேற எடம் பாருங்க

    பிகு: Google +ல் எனக்கு notification வந்ததால இங்க வந்தெனெ. இல்லைன்னா, இவ்ளோ எழுதி இருக்க மாட்டேன் :)

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் விஜய்-ஐ பற்றி ஒரு நல்ல விசயங்கள் கூட சொல்லாத போதே தெளிவாக தெரிகிறது நீங்கள் ஒரு பக்கா விஜய் எதிராளி என்று.

    1.விஜய் எவ்வளவு சிறப்பாக நடனம் ஆடுகிறார். அதை நீங்கள் குறிப்பிடாததாலும்
    2.விஜய் அழகுதான். மிகவும் இனிமையாக பாடக்கூடியவர். அதை நீங்கள் குறிப்பிடாததாலும்
    3.அவருடய பாடல்கள் அனைத்தும் ஹிட். அதை நீங்கள் குறிப்பிடாததாலும்
    4.குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் மனத்தை மிகவும் கவர்ந்தவர். அதை நீங்கள் குறிப்பிடாததாலும்
    5.இவரூடய ரசிகர்கள் மென்மாயானவர்கள். மற்ற நடிகர்களை அவ்வளவாக கிண்டல் செய்வதில்லை. அதை நீங்கள் குறிப்பிடாததாலும்
    6.சிறப்பான நகைச்சுவை mannerism உள்ளவர். அதை நீங்கள் குறிப்பிடாததாலும்
    7. அவர் அண்மையில் இயக்குனர் சங்கத்துக்கு லட்சம் சத்தமில்லாமல் நன்கொடையாக அளித்தது உங்களுக்கு தெரியுமா. இதெல்லாம் பற்றி நீங்கள் பேசாததால் நீங்கள் ஒரு பக்கா விஜய் எதிராளி-யே
    இன்னும் நிரய நிரய இருக்கிறது சொல்ல. ஆனால் என்னால் தமிழில் type செய்ய முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  3. அஜித் வழியை விஜய் இப்போது பின்பற்றுவதாகக் குமுதம் சொல்கிறது

    பதிலளிநீக்கு
  4. L(
    தமிழ்னாய் பிறந்துட்டு தமிழனை குறை ஒரு தமிழன் இங்கு தான் உள்ளான்.

    அஜித் தமிழ்நாட்டில் வாழட்டும், விஜய் ரசிகர்கள் குறை சொல்வதில்லை ஏன் என்றால் நாங்கள் தமிழன், .

    பதிலளிநீக்கு
  5. இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஒரே தமிழன்
    அவர்தான்
    நீங்கள் இந்த பதிவை எழுதியதர்காக நான்
    வெட்கபடுகிறேன்.
    மத்திய அரசாகட்டும்.மாநில
    அரசாகட்டும்
    தனது திரைப்படங்களால் எதிர்க்கும்
    ஒரே தமிழ்
    நடிகர்
    ரொம்ப தங்கமானவர் நன்பா

    பதிலளிநீக்கு