செவ்வாய், ஜூன் 05, 2012

'தெலுங்கு' கப்பார் சிங் & 'ஹிந்தி' The Dirty Picture - 2 in 1 திரை விமர்சனம்...

 நான் இப்போதெல்லாம் நிறைய தெலுங்கு படங்கள் பார்க்கிறேன். எனக்கு தெலுங்கில் ஹீரோ பெயர் மட்டுமில்லாம் பலரை பற்றியும் ஓரளவுக்கு தெரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டேன். ஆனால் இதற்கெல்லாம் முன்பு, 'தொளி பிரேமா' என்ற படத்தை பார்த்தேன். அதில் வந்த ஒரு ஹீரோ செய்யும் கோமாளித்தனத்தை பார்த்து கண்டிப்பாக யாராலும் 
ரசிக்காமல் இருக்க முடியாது. அதற்க்கு பிறகு அவர் நடித்த பல படங்களை நான் பார்த்திருந்தாலும், அவருடைய Screen Performance மட்டும் எந்த படத்திலும் குறையே இல்லை. படத்துக்கு படம் அதிகமாகிக் கொண்ட தான் போகிறது. சுருக்கமாக சொன்னால், நவரச நாயகன் கார்த்திக் & 'தல' அஜித் குமார் இவர்கள் இருவரையும் ஒரு மிக்ஸியில் போட்டு எடுத்தால் வருபவர் தான் இந்த 'பவர் ஸ்டார்' பவன் கல்யாண். இந்த 'கோமரம் புலி' நடித்த லேட்டஸ்ட் படம் தான் இப்போது வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் 'கப்பார் சிங்'.
 ஹிந்தி 'தபாங்', தமிழ் 'ஒஸ்தி' தான் தெலுங்கில் 'கப்பார் சிங்'. படத்தின் இயக்குனர் ஹரிஷ் சங்கர் படத்தை ரொம்பவே ரசித்து எடுத்திருக்கிறார் என்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. ஒரு கமர்ஷியல் படத்திற்கு வெறும் டைட்டிலில் மட்டும் 'மாஸ்' இருந்தால் போதாது. அந்த 'மாஸ் சமாச்சாரங்கள்' படத்தின் ஹீரோவிற்கு தோதாக பொருந்த வேண்டும் அதை மிக அருமையான செய்திருக்கிறார் இயக்குனர். எனக்கு பவன் கல்யாணிடம் பிடித்ததே அவரின் துள்ளலான நடிப்பும், வசன உச்சரிப்பில் பயன்படுத்தும் டைமிங்கும் தான். இந்த படத்தில் கூட அவர் ஒரு இடத்தில் 'நான் டைமை நம்பமாட்டேன், என் டைமிங்கை மட்டும் நம்புவேன்' என்று சொல்லியிருக்கிறார். அதே போல ஹிந்தி 'தபாங்கில்' உள்ள முக்கியமான ஒரு நான்கு காட்சிகளை மட்டும் எடுத்துக் கொண்டு, மற்ற காட்சிகளை தெலுங்கு படத்திற்கு ஏற்ப செய்தது சூப்பர். படத்தை மொத்தமாக தாங்கி நிற்பவர் நம்ம பவன் கல்யாண் தான்.


வழக்கம் போல ஹீரோயின் சுருதி ஹாசனுக்கு வெறும் நடப்பது, நிற்பது, டூயட் ஆடுவது என்று தான் பங்கை மிக 'சிறப்பாக' செய்துள்ளார். பிரம்மானந்தம், ஆலி போன்றவர்கள் கொஞ்சமாக நம்மை சிரிக்க வைக்கிறார்கள். இன்றைய நிலவரப்படி படத்தின் மொத்த வசூல் சுமார் 58 கோடி. படத்திற்கு இசை, தேவி ஸ்ரீ பிரசாத்.

 The Dirty Picture:
'The Dirty Picture' Hindi Movie Tamil Review
 இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளிவந்திருந்தாலும், நான் சமீபத்தில் தான் இந்த படத்தை பார்த்தேன். தெலுங்கில் டப் பண்ணப்பட்ட படத்தை பார்த்தபோது தான் படம் நன்றாகவே புரிந்தது. மறைந்த நடிகை நம்ம 'சில்க் ஸ்மிதா' வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். சில்காக நடிகை வித்யா பாலன் நடித்துள்ளார். எனக்கு இந்த படத்தில் நிறைய விஷயங்கள் பிடிக்கவில்லை. குறிப்பாக சில்க் ஸ்மிதா வேடம். இந்த கதாபத்திரத்தை ஒரு விலை மாது போலவே சித்தரிக்கப் பட்டுள்ளது. 'சில்க் மிகவும் திமிர் பிடித்தவர், அவர் எல்லாரையும் தன் காலடியில் கொண்டு வரவேண்டும்' என்ற எண்ணம் கொண்டவர் போல சித்தரித்திருப்பது அபத்தம். உண்மையில் சில்கின் குணம், மனதில் பட்டதை நேராக பேசக்கூடியவர் மட்டுமே என்பது அவருடன் பழகிய பலருக்கு நன்றாகவே தெரியும்.அதே போல நஸ்ருதின் ஷாவின் கதாபாத்திரப் பெயர் 'சூர்யகாந்த்'. அதுவும் கதை நடக்கும் இடம் 'சென்னை' என்று சொல்வது, யாரை 'நக்கல் செய்ய'?
 படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது வசனங்கள். ஒவ்வொரு வசனமும் செம ஷார்ப். 'ராத்திரியானா 12 மணி போல ஆகிடுறிங்க, காலைல 6 மணி போல ஆகிடுறிங்க' போன்ற Adults only வசனமும் சரி, 'எல்லாரும் என் இடுப்புல கை வைக்கணும்னு நெனச்சாங்களே தவிர யாரும் என் தலையில கை வச்சி ஆசிர்வாதம் பண்ணனும்னு நினைக்கல' போன்ற வசனமும் சரி. எல்லா வசனமும் 'நறுக்' வகை. மற்றபடி எனக்கு படம் ஒன்றும் பெரிதாக கவரவில்லை. படத்தின் மொத்த வசூல் 74 கோடி. படத்தில் நடித்த நடிகை வித்யா பாலனுக்கு 'சிறந்த நடிகைக்கான' தேசிய விருது கிடைத்தது. இந்த படத்தை இப்போது தமிழ், கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் ரீமேக் செய்கிறார்கள்.









3 கருத்துகள்:

  1. இரண்டு படங்களுமே நான் இன்னும் பார்க்கல பாஸ். தெலுங்கெல்லாம் நம்மளுக்கு புரியாது. மகாதீரா மட்டும் ஆங்கில உபதலைப்புடன் பார்த்தேன். கொஞ்சம் கொஞ்சம் புரிந்தது. ஆனாலும் உங்க விமர்சனம் பிரமாதம்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு நண்பா.. நான்கூட அண்மைக்காலமாக தெலுங்கு படங்களை விரும்பி பாக்கிறேன், இதற்கு முதல் மகேஷ்பாபு மற்றும் ரவிதேஜா பற்றி போட்ட கட்டுரையையும் ஏற்கனவே நான் பார்த்தேன்.. நன்றாக இருந்தது... தொடந்தும் இது போன்ற தமிழ் சினிமாவுக்கு அப்பாற்பட்ட மொழி சினிமா பற்றிய விடயங்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.....

    பதிலளிநீக்கு