ஞாயிறு, ஆகஸ்ட் 07, 2011

தெலுங்கு நடிகர் ரவி தேஜா - ஒரு பார்வை


எனக்கு சிறு வயதிலிருந்தே பிற மொழிப் படங்களை பார்ப்பது மிகவும் பிடிக்கும். காரணம், எனக்கு தமிழ் மட்டுமல்லாது தெலுங்கும் சரளமாக பேச வரும். தெலுங்கு தவிர்த்து மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற படங்களில் எனக்கு சில படங்கள் ரொம்ப பிடிக்கும். மலையாளத்தில் மனிச்சித்ரத் தாழ் (தமிழில் சந்திரமுகி), கன்னடத்தில் 'உபேந்திரா', ஹிந்தியில்
'ஷோலே' என்று சொல்லிக்கொண்டே போகலாம். நான் பதிவு எழுத ஆரம்பித்த புதிதில், பதிவுலகின் பிரபலங்களான ஜாக்கி சேகர், கேபிள் சங்கர் போன்றவர்கள் தெலுங்கு, ஹிந்தி படங்களை விமர்சனம் செய்திருந்ததை பார்த்தபோது நானும் இது போன்ற பிற மொழித் திரைப்படங்களை, வேறு மாநில திரையுலகத்தை சார்ந்தவர்களை பற்றி எனக்கு தெரிந்த தகவல்களோடு எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதன் விளைவே இந்த பதிவு. அதுமட்டுமல்ல, எனக்கு தெலுங்கில் மிகவும் பிடித்த நடிகர் ரவி தேஜா தான். அதனால் தான் ஆரம்பமே அவராக இருக்கட்டும் என்று இந்த பதிவை எழுதுகிறேன். இந்த பதிவின் வரவேற்ப்பை பொறுத்து இது தொடர் பதிவாக மாற வாய்ப்புள்ளது. ரவி தேஜா, தெலுங்கு சினிமாவின் இன்றைய முன்னணி ஹீரோ. இவர் 1968, ஜனவரி 26 அன்று கிழக்கு கோதாவரியில் உள்ள ஜகம்பேட்டாவில் பிறந்தார். இவரது இயற் பெயர் பூபதிராஜு ரவி ஷங்கர்ராஜு. இவரது தந்தை ஒரு மருந்து விற்பனையாளர். ரவி தேஜாவுக்கு இரண்டு தம்பிகளும் உண்டு. இவருக்கு ஆறு வயதிருக்கும் போது இவரின் தந்தையின் பணி மாற்றத்தின் காரணமாக பம்பாயில் குடியேறினார்கள். ரவி தேஜாவிற்கு ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் என்றால் உயிர். ரவி தன் சிறு வயதிலேயே அமிதாப் போல சினிமாவில் பெரிய ஹீரோவாக வரவேண்டும் என்று முடிவு செய்தார். இவரின் சினிமா ஆசைக்காக சில விபரீத விஷயங்களையும் செய்து பார்த்தார்.


ஒரு நாள் இவரின் அம்மா கடைத்தெருவிற்கு சென்றிருந்த போது இவர் வீட்டில் உள்ள மெத்தையில் தீ வைத்து விட்டு, அந்த மெத்தையின் ஒரு பக்கத்தில் இவரின் இரண்டு தம்பிகளையும் கட்டிப்போட்டு விட்டு மற்றொரு முனையிலிருந்து தீயை தாண்டி குதித்து 'அமிதாப்' போல காப்பாற்ற நினைத்து, அதற்குள் அவரது அம்மா வந்து பார்த்து ரவிக்கு 'தர்ம அடி' கொடுத்தார்கள். அதுமட்டுமல்ல, ஒரு தடவை இவர் சினிமா ஆசையின் காரணமாக பதினோரு வயதிலேயே வீட்டை விட்டு ஓடிவிட்டார். ஒரு வழியாக பள்ளிப்படிப்பை வட இந்தியாவில் முடித்த அவர், தன் கல்லூரி படிப்பை விஜயவாடாவில் படிக்க ஆரம்பித்தார். ஆனால் சினிமாவின் மீதிருந்த தீவிரத்தால் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு, சென்னைக்கு ரயிலேறினார்.
ரவி தேஜா சென்னை வந்து பல முன்னணி படத்தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்று நடிக்க வாய்ப்பு கேட்டுப்பார்த்தார். ஒன்றும் கிடைத்தபாடில்லை. பின்பு ஹைதராபாத் வந்து நடிகராக வாய்ப்பு தேடி பின்பு வேறு வழியில்லாமல் டிவி சீரியல்களில் உதவி இயக்குனராக பணிபுரிய ஆரம்பித்தார். பின்பு தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாக்களில் உதவி இயக்குனராக பணிபுரியத் தொடங்கினார். டைரக்டர் கிருஷ்ணவம்சி (நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவர்) அவரிடம் தான் ரவி தேஜா இணை இயக்குனராக நீண்ட காலமாக இருந்தார். ரவிக்கு ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவருக்கு அதற்கான வாய்ப்பை யாரும் வழங்க முன்வரவில்லை. அந்த வாய்ப்பை வழங்கியது அவரின் டைரக்டர் கிருஷ்ணவம்சி.

'சிந்தூரம்' என்று வம்சி இயக்கிய அப்படத்தில் ரவி தேஜாவை ஒரு பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவைத்தார். ரவி தேஜாவின் கதாபாத்திரம் மக்களிடத்தில் நன்றாக பேசப்பட்டாலும், அதன் பிறகு ரவிக்கு பெரிதாக வாய்ப்புகள் ஒன்றும் வரவில்லை. அதனால் ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லன், குணசித்திர வேடங்களில் ரவி தேஜா நடிக்க ஆரம்பித்தார். நடுவில் ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார் ரவி தேஜா. ஆனால் அந்த படங்கள் தோல்வியடைந்தன.
ரவி தேஜா உதவி இயக்குனராக பணிபுரிந்தபோது அவருடன் இணைந்து பணியாற்றியவர், இன்றைய டோலிவுட் இயக்குனர் பூரி ஜகன்னாத். அப்போதெல்லாம் பூரி ஜகன்னாத் சில தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி ஓகே வாங்கிய பிறகு 'யாரை ஹீரோவாக உங்கள் படத்தில் நடிக்க வைக்கலாம்? என்று தயாரிப்பாளர் கேட்டால், கசங்கிய சட்டையும், சில நாள் தாடியுடன் இருக்கும் ரவி தேஜாவை காட்டி 'இவர் தான் என் படத்தின் ஹீரோ' என்பாராம் பூரி. ரவியின் தோற்றத்தை பார்த்து தயாரிப்பாளர் ஓட்டமெடுப்பாராம்.அப்படிப்பட்ட நண்பனை விட்டு விடுவாரா பூரி? அவர் இயக்குனராக வளர்ந்த பிறகு ரவிதேஜாவை வைத்து ஒரு படம் இயக்கினார் அவர்.


'இட்லு ஸ்ராவணி சுப்பிரமணியம், ரவி தேஜாவுக்கு அவரின் திரையுலக வாழ்க்கையில் பெரும் திருப்புமுனை ஏற்படுத்திய படம். இப்படம் சூப்பர் டுப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு ரவி தேஜா நடித்த முக்கால் வாசி படங்கள் இன்றைய தேதிவரை மாஸ் ஹிட்ஸ். இன்றைக்கு அவர் வெறும் ரவி தேஜா அல்ல, 'மாஸ் மஹாராஜா' என்ற பட்டத்துக்கு சொந்தக்காரர். மிரப்பகாய், டான் சீனு, துபாய் சீனு, சம்போ சிவா சம்போ, கிருஷ்ணா, நேநிந்தே, வெங்கி என்று இவர் நடித்த பல படங்கள் கமர்சியல் ஹிட் ஆகி இவரின் மார்க்கெட் ரேட்டை இப்போது உயர்த்திவிட்டது. இவர் நடித்த சில படங்கள் தமிழில் கூட ரீமேக் செய்யப்பட்டன. அதில் கிக் (தில்லாலங்கடி), விக்ரமார்குடு (சிறுத்தை), பத்ரா (சரவணா), அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி (எம்.குமரன் S/o மகாலட்சுமி), இடியட் (தம்) ஆகும்.
ரவி தேஜாவுக்கு கல்யாணி என்ற மனைவியும், மொக்க்ஷதா என்ற எட்டு வயது மகளும், மணித் என்ற ஐந்து வயது மகனும் உள்ளனர். அவரின் தம்பிகளும் தெலுங்கு சினிமாவில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்கள். ரவி தேஜா படம் என்றால் கல்லுரி மாணவர்கள், பெண்களிடத்தில் அப்படி ஒரு கிரேஸ். தயாரிப்பாளர்களின் கதாநாயகன், இயக்குனர்களின் ஹீரோ என்ற சகலத்திலும் ரவி தேஜாவின் பெயர் தான் இடம் பெறுகிறது. ரவி தேஜாவின் கலாட்டாவான நடிப்பும், வேகமான வசன உச்சரிப்பும் தான் அவரின் பிளஸ். இன்றைய விடலை பருவ பையன்களுக்கு ரோல் மாடல் இந்த 'மாஸ் மஹாராஜா' தான்.






(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).





என்றும் அன்புடன்



10 கருத்துகள்:

  1. பெயரில்லா12 ஆகஸ்ட், 2011 05:03

    muthu muyarchi nanba.. muthal vote pottachu...
    en login work aaga maatenguthu...so commenting as anony..

    abimanyu

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா12 ஆகஸ்ட், 2011 08:53

    சூப்பர் தலைவா,,,,,,,,,,,, தெலுகு பதிவு தொடரடும்,,,,,,,,,(மகெஷ் பாபு,) பத்தி சொல்லுக

    பதிலளிநீக்கு
  3. நல்ல அறிமுக பதிவு..
    வாழ்த்துக்கள்..

    http://sempakam.blogspot.com/2011/08/blog-post_09.html

    பதிலளிநீக்கு
  4. //muthu muyarchi nanba.. muthal vote pottachu...
    en login work aaga maatenguthu...so commenting as anony..

    abimanyu//


    வருகைக்கு நன்றி அசோக்.

    பதிலளிநீக்கு
  5. //சூப்பர் தலைவா,,,,,,,,,,,, தெலுகு பதிவு தொடரடும்,,,,,,,,,(மகெஷ் பாபு,) பத்தி சொல்லுக//


    வருகைக்கு நன்றி தலைவா. என் அடுத்த பதிவு, மகேஷ் பாபுவை பற்றி தான்.

    பதிலளிநீக்கு
  6. //vidivelli சொன்னது…
    நல்ல அறிமுக பதிவு..
    வாழ்த்துக்கள்.//


    வருகைக்கு நன்றி விடிவெள்ளி.

    பதிலளிநீக்கு
  7. //இராஜராஜேஸ்வரி சொன்னது…
    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்//


    இராஜராஜேஸ்வரியின் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. //குணசேகரன்... சொன்னது…
    Nice topic..way of writing is good..keep it up..//


    Thank You Mr. Gunasekaran.

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா27 ஆகஸ்ட், 2011 14:18

    //சூப்பர் தலைவா,,,,,,,,,,,, தெலுகு பதிவு தொடரடும்,,,,,,,,,(மகெஷ் பாபு,) பத்தி சொல்லுக//


    வருகைக்கு நன்றி தலைவா. என் அடுத்த பதிவு, மகேஷ் பாபுவை பற்றி தான்.

    i'm waiting on mahesh babu பதிவு plz

    பதிலளிநீக்கு