செவ்வாய், ஜூன் 07, 2011

கே.பாக்யராஜின் 'முந்தானை முடிச்சு' - திரை விமர்சனம்

1980 களின் காலகட்டங்களில் எவ்வளவோ தமிழ் திரைப்படங்கள் வெளிவந்திருக்கிறது. அப்போது வந்த பல திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பதை அனைவரும் அறிந்திருப்பார்கள். அதே போல ஒவ்வொரு படத்துக்கும், ஒவ்வொரு Variety இருக்கும். காதல், குடும்ப செண்டிமெண்ட், பக்கா கமர்சியல் என்று அன்றைய இயக்குனர்கள் பின்னி
பெடலேடுத்து கொண்டிருந்தார்கள். அன்றைய காலகட்டத்திலேயே ஒரு பெரிய கண்ணாடியை போட்டுக்கொண்டு, திருட்டு முழி முழித்துக்கொண்டு ஒருவர் சினிமாவில் படங்களை இயக்கி, அந்த படங்களில் அவரே நடித்துக்கொண்டிருந்தார். அவரின் படங்கள் ஒவ்வொன்றும் Block Buster Hits. இன்றைய 'சூப்பர் ஸ்டாருக்கும்', அன்றைய 'புரட்சி தலைவருக்கும்' மிகவும் நெருங்கியவர். ஆம். இந்திய சினிமாவின் மிக சிறந்த Screenplay Writer திரு.கே. பாக்யராஜ் அவர்களின் 'முந்தானை முடிச்சு' திரை விமர்சனத்தை காண்போம்.

கிராமத்து நாட்டாமையின் மகள் ஊர்வசி. அந்த ஊரின் பள்ளிகூடத்திற்கு வாத்தியாராக வேளை பார்க்க கைக்குழந்தையுடன் வருகிறார் பாக்யராஜ். ஆரம்பத்தில் பாக்யராஜிடம் குறும்புத்தனம் பண்ணும் ஊர்வசி, பின்பு அவர் கல்யாணம் ஆகி மனைவியை இழந்தவர் என்ற பரிதாபத்தாலும், அவரின் நல்ல உள்ளத்திற்காகவும் அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால் பாக்யராஜ் ஊர்வசியின் காதலை ஏற்க மறுக்க, ஊர்வசி பாக்யராஜின் மேல் 'வீண் பழி' சுமத்தி அவரை திருமணம் செய்து கொள்கிறார். தன்னை வஞ்சகமாக ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட ஊர்வசியை வெறுக்கும் பாக்யராஜ், தன் மனைவியின் மனதை புரிந்து கொண்டாரா என்பதை சொல்லும் படம், இந்த 'முந்தானை முடிச்சு'.பாக்யராஜ் ஒன்றும் 'சிறந்த நடிகர்' கிடையாது. ஆனால் அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தை just like that செய்துவிடுவார். அதேசமயம் அவருக்கு காமெடி கலந்த வேடம் அமைந்து விட்டால், மனிதர் கலக்கி விடுவார். இந்த படத்தில் பல இடங்களில் அருமையாக ஸ்கோர் செய்கிறார் பாக்யராஜ். 'முருங்கைக்காய்' சாப்பிட்டுவிட்டு மனைவி பாடும் பாடலை கேட்டு 'ஏய், என்ன இது? தாலாட்டா?' என்று டென்ஷன் ஆகும் இடம் செம காமெடி. அதை விட பெரிய காமெடி, பாக்யராஜ் ஆடும் டான்ஸ். மற்றபடி அவரின் இயல்பான அந்த 'திருட்டு முழி' பாக்யராஜை ரசிக்கும் அனைவருக்கும் அது 'All time Favorite Look'.பாக்யராஜின் மனைவியாக ஊர்வசி. ஊர்வசியை பற்றி ஏற்கனவே என் முதல் பதிவான 'மைக்கல் மதன காம ராஜன் - என் பார்வையில்' திரை விமர்சனத்தில் எனக்கு பிடித்த நடிகை என்று சொல்லியிருக்கிறேன். ஊர்வசி அழகாக நடித்துள்ளார் இந்த படத்தில். இத்தனைக்கும் இந்த படம் அவரின் முதல் படமாம். நடிகர் கமல்ஹாசனே தன் படங்களில் இவர் எப்படி நடிக்கிறார் என்று பார்த்துவிட்டு தான் கமல் நடிக்க ஆரம்பிப்பார். சில சமயங்களில் கமலையே over take செய்து விடுவார் ஊர்வசி என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். படத்தில் முதல் பாதியில் குறும்புகார பெண்ணாகவும், பிற்பாதியில் தன் கணவனின் அன்பிற்காக ஏங்கும் மனைவியாகவும் அருமையாக நடித்துள்ளார்.டீச்சர் பட்டுவாக தீபா. எனக்கு தீபாவை பார்க்கும்போதெல்லாம் இவர் '1980's நமீதா' என்று நினைத்துக்கொள்வேன். காரணம் அவரின் உடல்வாகு. இந்த படத்தில் இவரை பல இடங்களில் முக்கிய கதாபாத்திரமாக 'நடிக்கவும்' வைத்துள்ளார் இயக்குனர். சிறுவனாக வரும் தவக்களை, பக்கத்து வீட்டு பெண்ணாக வரும் கோவை சரளா மற்றும் பாக்யராஜின் முன்னாள் மனைவியாக கௌரவ வேடத்தில் நடித்துள்ள பூர்ணிமா பாக்யராஜ் என்று படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.
படத்துக்கு இசை இசைஞானி இளையராஜா. வழக்கம் போல இந்த படத்திலும் பாடல்கள் அருமை. குறிப்பாக 'கண்ண தொறக்கணும் சாமி' பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுமட்டுமல்ல, இளையராஜா பாக்யராஜ் முதன்முதலாக இணைந்தது இந்த படத்தின் மூலமாகத்தான். படத்தை தயாரித்தது AVM. அன்றைய காலகட்டங்களில் AVM இன் ஆஸ்த்தான இயக்குனர் யாரென்றால், திரு.S. P. முத்து ராமன் தான். ஆனால் முதன்முதலில் வெளியில் இருந்து வந்து AVM இற்கு டைரக்ட் செய்த முதல் இயக்குனர் கே. பாக்யராஜ் தான். படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் திரு. கே. பாக்யராஜ். இவரிடம் இருந்த பவர், ரசிகனின் 'நாடியை' தெரிந்து வைத்திருப்பது. அது தான் இவருக்கு இன்றளவிலும் பெயர் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. சும்மாவா? புரட்சி தலைவர் எம்.ஜி.யாரின் 'கலை வாரிசு' ஆயிற்றே.


இந்த படம் 1983 அன்று வெளிவந்தது. அந்த வருடத்திலேயே அதிகமாக வசூல் சாதனை செய்த படம் இந்த 'முந்தானை முடிச்சு'. இந்த படத்தின் சிறந்த நடிகராக அந்த வருடத்திற்கான Filmfare விருது பெற்றார் பாக்யராஜ். இன்றும் பாக்யராஜ் போல ஒரு குடும்ப பாங்கான இயக்குனர் கிடைப்பாரா என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் இப்போது வரும் இயக்குனர்கள் அனைவரும் 'செண்டிமெண்ட்' எங்களுக்கு வேண்டாம் என்பது போல முகத்தை திருப்பி வைத்து கொள்கிறார்கள். ஒரு வேளை கே.பாக்யராஜ் போல அவர்களால் திரைக்கதை எழுதமுடியாது என்று நினைத்து விட்டார்களோ என்னவோ?


(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).



என்றும் அன்புடன்

6 கருத்துகள்:

  1. முருங்கைக்காயின் பயன் "அதற்குதான்" என்று இன்றுவரை மக்கள் நினைக்கும் அளவுக்கு அந்த காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது முந்தானை முடிச்சுதான் எனபது மறுபதற்கில்லை..

    பதிலளிநீக்கு
  2. அசத்தல் தான்....

    இது நல்ல முயற்ச்சிதான் செய்யுங்கள்..
    அதுக்கா ரொம்ப பழைய படமெல்லாம் எழுதிபுடாதிங்க...

    பதிலளிநீக்கு
  3. //////
    (தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். //////

    எங்கு வாக்களிக்க வேண்டும் என்று தெரியவில்லை...

    பதிலளிநீக்கு
  4. சார்...நல்ல எயதறீங்க...அப்புறமா எதுக்கு ஊக்கு, குண்டூசி விக்கோணும்...காஞ்சி பெரியவர் என்ன சொல்றாருன்னா...

    http://bakthicafe.blogspot.com/2009/12/blog-post_12.html

    பிரியுதா...?

    பதிலளிநீக்கு