வெள்ளி, ஜனவரி 02, 2015

2014 சிறந்த 10 பாடல்கள் - ஒரு பார்வை...

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டின் சிறந்த 10 படங்களை எழுதலாம் என்று தான் முதலில் நினைத்தேன். ஆனால் 2014 இன் சிறந்த 10 பாடல்களை எழுதிவிட்டு பிறகு படங்கள் பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன். ok. Lets see the 2014 Top 10 Songs Now.


1.போகும் பாதை - பிசாசு:

படம்: பிசாசு
பாடல்: போகும் பாதை
இசை: ஆரோல் கோரெல்லி
பாடியவர்: உத்ரா
பாடலை எழுதியவர்: தமிழச்சி தங்கபாண்டியன்

என் கமெண்ட்:
மனதை பிசைந்த பாடல். உத்ராவின் குரலும், தமிழச்சி தங்கபாண்டியனின் வரிகளும் அந்த வயலின் இசையோடு ஒலிக்கும்போது பாடல் நெஞ்சை தொடுகிறது. Simply Awesome.

2.இறந்திடவா - மெட்ராஸ்:
படம்: மெட்ராஸ்
பாடல்: இறந்திடவா
இசை: சந்தோஷ் நாராயண்
எழுதிப் பாடியது: கானா பாலா

என் கமெண்ட்:
கானா பாடல்கள் என்றாலே ஒரு தனி ரகம் தான். காதல், மகிழ்ச்சி, கிண்டல், நட்பு, சுற்றம், வலி, சோகம் என்றும் ஆனைத்து ஏரியாவிலும் இருந்தும் பாட்டு எழுதலாம். இந்த பாடலில் கானா பாலாவின் பாடல் வரிகள், அந்த எழவு வீட்டிற்கு வந்தவர்களின் சோகத்தை அற்புதமாக பிரதிபலித்தது. அது தான் இந்த பாடலை நாம் ரசிப்பதற்கு காரணம்.

3. உனக்காக பொறந்தேனே - பண்ணையாரும் பத்மினியும்:
படம்: பண்ணையாரும் பத்மினியும்
இசை: ஜஸ்டின் பிரபாகரன்
பாடல்: உனக்காக பொறந்தேனே
:பாடியவர்கள்: பலராம் & சந்தியா
எழுதியவர்: வாலி

என் கமெண்ட்:
வயோதிக காதலின் அழகான புரிதல் இந்த பாடல். கவிஞர் வாலியின் வரிகளை படமாக்கிய விதம், Wonder. பாடகர் பாலராமை விட, பாடகி சந்தியாவின் குரல் நிறையவே என்னை வசீகரித்தது.

4.கண்ணம்மா கண்ணம்மா - ஜிகர்தண்டா:
படம்: ஜிகர்தண்டா
பாடல்: கண்ணம்மா கண்ணம்மா
இசை: சந்தோஷ் நாராயண்
எழுதியவர்: முத்தமிழ்
பாடியவர்கள்: ரீட்டா & அந்தோணி தாசன்

என் கமெண்ட்:
சந்தோஷ் நாராயண் இசையில் இந்த பாடல் மிக அழகாக வந்திருக்கிறது.என்னை விட என் மகளுக்கு தான் இந்த பாடல் மிகவும் பிடிக்கும்.

5. இந்த பொறப்புத் தான் - உன் சமயலறையில்:

படம்: உன் சமயலறையில்
பாடல்: இந்த பொறப்புத் தான்
இசை: இளையராஜா
எழுதியவர்: பழனி பாரதி
பாடியவர்: கைலாஷ் கேர்
என் கமெண்ட்:
மனிதன் வாழ்வதற்கே உணவிற்காகத்தானே? அதை சுவைப்பட ருசித்து சாப்பிடு' என்பதே இந்த பாடலின் கான்செப்ட். இன்னும் இந்த பாடல் என் மொபைலில் நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். கண்டிப்பாக பாடலில் வரும் ஒவ்வொரு ஊருக்கும் சென்று அங்கு பிரபலமான உணவை ருசிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியிருக்கிறது இந்த பாடல்.

6. எங்கே போகுதோ வானம் - கோச்சடையான்:
படம்: கோச்சடையான்
பாடல்: எங்கே போகுதோ வானம்
இசை: ஏ.ஆர். ரகுமான்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்

என் கமெண்ட்:
இந்த வருடம் வெளிவந்த 2 ரஜினி படங்களில் Opening Song ரசிக்கத்தக்க வகையில் இருந்ததென்றால், அது இந்த பாடல் தான். அனிமேஷன் படமாக இருந்தாலும், திரும்பத் திரும்ப கேட்கத்தூண்டும் அக்மார்க் 'ரஜினி' பாடல்.

7. செல்பி புள்ள - கத்தி
படம்: கத்தி
பாடல்: செல்பி புள்ள
இசை: அனிருத்
எழுதியவர்: மதன்கார்க்கி
பாடியவர்கள்: விஜய், சுனிதி சௌஹான்

என் கமெண்ட்:
உண்மையில் நடிகர் விஜய்க்கு இளைஞர்களை ஈர்க்கும் சக்தி அவரின் குரலில் உண்டு. அதுவும் அனிருத் போன்ற இசையமைப்பாளரோடு கை கோர்த்தால், கண்டிப்பாக அந்த வருடத்தின் சிறந்த பாடல்களின் வரிசையில் இடம் பெற்று விடும் அவரின் பாடல். அது இந்த முறையும் பொய்க்கவில்லை. முக்கியமாக விஜய்க்கு சரிசமமாக பாடி அசத்தியிருக்கிறார் பாடகி சுனிதி சௌஹான் என்பது குறிப்பிடத்தக்கது.

8. அம்மா அம்மா - வேலையில்லா பட்டதாரி
படம்: வேலையில்லா பட்டதாரி
பாடல்: அம்மா அம்மா
இசை: அனிருத்
எழுதியவர்: தனுஷ்
பாடியவர்கள்: தனுஷ் & எஸ். ஜானகி

என் கமெண்ட்:
அம்மாவை பற்றிய உயர்வான பாடல். தனுஷின் சோகமான குரலும், நீண்ட நாட்களுக்குப் பிறகு பாடிய எஸ். ஜானகியின் குரலும் பாடலை பல மடங்கு மெருகேற்றி விட்டது. 'எனக்கு குத்து பாடல் மட்டுமல்ல, செண்டிமெண்ட் பாடலும் போட வரும்' என்று மறுபடியும் நிருபித்து விட்டார் அனிருத்.

9. மீச கொக்கு - என்னமோ நடக்குது
படம்: என்னமோ நடக்குது
பாடல்: மீச கொக்கு தான்
இசை: பிரேம்ஜி அமரன்
பாடியவர்கள்: விஜய் யேசுதாஸ் & சைந்தவி

என் கமெண்ட்:
நல்ல துள்ளலான பாடல். இந்த பாட்டுக்கு 'பிரேம்ஜி அமரன்' என்றால் நம்பமுடியவில்லை என்னால். பல்லவியும் சரணமும் மிக அழகாக பாட்டில் அமைந்திருக்கிறது. விஜய் யேசுதாசும், சைந்தவியும் மிக அழகாக பாடியிருக்கிறார்கள்.

10. டக்கு டக்கு டக்குனு - சிகரம் தொடு:
படம்: சிகரம் தொடு
பாடல்: டக்கு டக்கு டக்குனு
இசை: டி. இமான்
எழுதியவர்: மதன்கார்க்கி
பாடியவர்கள்: அந்தோணி தாசன் & வருண் பரந்தாமன்

என் கமெண்ட்:
இது ஒரு டைம் பாஸ் பாடல். இன்றைய உலக வேகத்திற்கு மனிதர்கள் எப்படி ஓடிக் கொண்டிருக்கிறார்கள், வாலிப வயதினர்கள் அனைத்தும் உடனடியாக நடக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் பிரதிபலிப்பே இந்த பாடல்.



Thanks and Regards

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக