வியாழன், ஜூலை 21, 2011

நடிகர் ரகுவரன் - என் மறக்கமுடியாத வில்லன்

எனக்கு அப்போது பதினோரு வயது. என் பெற்றோர்கள் என்னை தலைவர் நடித்த 'பாட்ஷா' படத்தை பார்ப்பதற்கு சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அபிராமி திரையரங்கிற்கு அழைத்து சென்றார்கள். படத்திற்கு செம கூட்டம். படத்தில் ரஜினியை 'ஆ'வென்று வாயை பிளந்து கொண்டு ரசித்தேன். இண்டர்வல்லுக்கு பிறகு வரும் 'பாட்ஷா' ரஜினிக்கான காட்சிகள்
முடிந்தவுடன், வில்லன் அறிமுகம் ஆகும் சீன் வந்தது. அந்த காட்சியில், ஒருவர் சோபாவில் உட்கார்ந்து கொண்டு எதிரில் அமர்ந்து இருக்கும் அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள் என்ற பெரிய மனிதர்களோடு பேசிக்கொண்டிருப்பார். கேமரா அவரைக்காட்டாமல், அவர் அமர்ந்திருக்கும் சோபாவின் பின்னாலிருந்து கேமரா எழும்பும். அப்போது ஒருவன் சோபாவில் உட்கார்ந்திருப்பவரிடம் வந்து 'சார், விநாயகர் கோவில்ல நாம வச்ச பாமை பாட்ஷா எடுத்துட்டானாம்' என்பான். அப்போது தான் வில்லனின் முகம் ஸ்க்ரீனில் வரும்.
நன்றாக ஷேவ் செய்யப்பட்ட முகம், ஆனால் அவரின் பார்வையில் ஒரு கொலைவெறி. 'டுமில்' என்று அவரின் துப்பாக்கி, செய்தி சொன்ன ஆளை சுடும். பயத்தில் சோபாவில் அமர்ந்திருப்பவர்கள் பயந்துபோய் எழ, சைகையாலேயே அவர்களை உட்காரச்சொல்லி 'Bad News' என்பார். அந்த சின்ன வயதில் அவரை நான் பல படங்களில் பார்த்திருந்தாலும், நான் சரியாக அவரை கவனிக்கவில்லை. இந்த படத்திலிருந்து தான் நான் அவரை நன்றாக கவனிக்க ஆரம்பித்தேன். நான் அவரை பற்றி தெரிந்து கொண்ட முதல் தகவல் அவர் பெயர் 'ரகுவரன்' என்பது தான்.

பொதுவாக தென்னிந்திய சினிமாக்களை பொறுத்தவரையில் ஒவ்வொரு கதாபத்திரத்திற்க்கும் ஒரு வரமுறையுண்டு. அது இன்றுவரைக்கும் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் சில படங்களில் அந்த வரைமுறைகளுக்குள் சிக்காமல் சில கலைஞர்கள் வெள்ளித்திரையில் பிரபலமடைகிறார்கள். ஒரு வில்லனின் வரையுரைகள் என்ன? ப்ளாக் அண்ட் ஒயிட் காலங்களில் கன்னத்தில் மச்சம், கண்ணில் பெண்களுக்கு போட்டியாக கரும் மை, கட்டுமஸ்தான உடல் என்று இருப்பார்கள் வில்லன்கள் (அதுவும் சொல்லி வைத்தது போல ஒரே மாதிரி நடிப்பார்கள் 'அன்றைய வில்லன்கள்').
1980 களில் ஜிகினா செட்டிங், படு கவர்ச்சியான உடையில் வில்லனின் ஆசை நாயகிகள், 'டைகர், ஜிந்தா, X, Y, Z என்று வில்லன்களுக்கு கண்டமேனிக்கு பேர் வைத்து கொண்டு அலைந்து கொண்டிருந்த காலகட்டத்தில் வந்து சேர்ந்தவர் தான் ரகுவரன். ஆனால் அவர் அந்த 'வரையுரைக்குள்' சிக்காமல் அவருக்கென்று ஒரு தனி ஸ்டைலை வளர்த்துக்கொண்டார். அது தான் ரகுவரனை ஒரு நல்ல, மாறுபட்ட வில்லன் நடிகராக மக்களிடம் கொண்டு சேர்த்தது. பொதுவாக ரகுவரனின் மாஸ்டர் பீஸ் படங்கள் என்னென்ன என்று கேட்டால், சட்டென்று 'பாட்ஷா, புரியாத புதிர், முதல்வன், முகவரி' என்று வரிசையாக சொல்லுவார்கள். இதெல்லாமே அவரின் மாஸ்டர் பீஸ் தான். அதை மறுப்பதற்கில்லை.
ஆனால் அவர் நடித்த படங்களை சற்று கூர்ந்து கவனித்தால், முக்கால்வாசி படங்களில் தன் ஆவர்த்தனத்தை தனியாக காட்டியிருப்பார். அவரின் குரலும், Body Language ம் தான் அவரின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட். அதுமட்டுமல்ல, ரகுவரன் நடித்த படம் என்றால், ஹீரோ யாராக இருந்தாலும் சரி, திரையரங்கிற்கு போகாமல் இருக்க மாட்டார்கள் ரசிகர்கள். ரகுவரன் நடித்த பல படங்களில் எனக்கு பிடித்த படங்கள்,
மக்கள் என் பக்கம்,
அபிமன்யு,
பூ விழி வாசலிலே,
என் பொம்மைக்குட்டி அம்மாவுக்கு,
தொட்டா சிணுங்கி,
லவ் டுடே,
சிவா (தமிழில் உதயம்), &
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.
இந்த படங்கள் மட்டுமில்லாது, மேற்சொன்ன ரகுவரனின் மாஸ்டர் பீஸ் படங்களும் எனக்கு பிடித்த படங்கள் தான்.

Hollywood படமான 'The Dark knight' படத்தில் 'Joker' என்ற ஒரு வில்லன் கதாபாத்திரம் வரும். அந்த வேடத்தில் நடித்த Hollywood நடிகர் 'Heath ledger' நடிப்பிற்க்காகவே என் நண்பர் இந்த படத்தை அடிக்கடி பார்ப்பார். ஆனால் என் நண்பர் 'இந்த மாதிரி வில்லன் கதாபாத்திரம் எல்லாம் ஏதாவது ஒரு இங்கிலீஷ் படத்துல தான் வரும். ஆனா இதை விட சிறப்பா நடிக்கிற நடிகர் ஒருத்தரு நம்ம நாட்டுல இருந்தாரு. அவரு தான் நம்ம ரகுவரன்' என்பார். உண்மை தான். ஒரு கதாபாத்திரத்தை மிகவும் இயல்பாக நடிக்கும் நடிகர்கள் நம் சினிமா உலகில் மிகவும் குறைவு.
அதே போல வில்லனாக வலம் வந்த இவர், பின்னாளில் சிறந்த குணசித்திர நடிகராக மாறி வெற்றி பெற்றதுக்கு அவரின் இயல்பான, தனித்தன்மையான நடிப்பு தான் காரணம். இன்றைக்கு தமிழ் சினிமாவில் அறிமுகப்பாடலுக்கு குத்தாட்டம் ஆட நிறைய நடிகர்கள் வந்து விட்டார்கள். ஆனால் அவர்களை எதிர்த்து சண்டையிட ஒரு 'சிறந்த வில்லன்' இல்லாமல் போனது தான் காலத்தின் கொடுமையே.

நடிகர் கமல்ஹாசன் 'ஆனந்த விகடன்' நாளிதழுக்கு ஒரு முறை பேட்டியளித்திருந்தார். அதில் ஒரு கேள்வி இடம் பெற்றது. 'ரகுவரனுடன் நடிக்காமல் போனது ஏன்?' என்ற கேள்விக்கு, 'இன்னும் காலம் இருக்கிறது. பிறகு நடித்துக்கொள்ளலாம் என்று இருந்து விட்டேன்' என்று பதிலளித்தார் கமல். ஆனால் உண்மை அதுவல்ல. அவருக்கு பயம் ஜாஸ்தி. 'தன்னை விட இவர் சிறப்பாக தன் படங்களில் நடித்து, பெரிய அளவில் பெயர் வாங்கி விடுவாரோ' என்ற பயம் தான் அது. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தைரியசாலி தான்.
நம் பதிவுலகில் நடிகர் ரகுவரனை பற்றி யாராவது பதிவு எழுதியிருக்கிறார்களா என்று தேடிப்பார்த்து துவண்டு போனேன். ஒருவர் கூட அவரை பற்றி தனி பதிவு எழுதவில்லை. கண்ட குப்பைகளையும், கடுப்பேற்றும் மொக்கை பதிவுகளையும் எழுதுகிறார்கள் நம் 'பதிவுலக நண்பர்கள்'. ஒரு சிறந்த நடிகனின் மரண அஞ்சலி பதிவு கூட எழுத மாட்டேன் என்கிறார்கள். என்ன சொல்வது? அப்படி யாராவது எழுதியிருந்தால் எனக்கு லிங்க் அனுப்புங்கள். ஒரு வேளை, யாருமே எழுதவில்லை என்றால் 'ஒரு நல்ல கலைஞனுக்கு இவ்வளவு தான் மரியாதை' என்று நினைத்துக் கொள்வேன்.

(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டுஎன்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்குபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).


என்றும் அன்புடன்

16 கருத்துகள்:

  1. ஒரு நல்ல மனிதர் வில்லன் நடிகரை நாம் இழந்துவிட்டோம்...நினைவுபடுத்தி பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  2. ரகுவரனைப் போல் ஒரு சிரப்பான நடிகரை இக்காலத்தில் பார்ப்பது அறிது. நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  3. தலைப்பில் இருப்பதை போல அவர் மறக்க முடியாத வில்லன் மட்டும் இல்லை நண்பா .... அவர் எத்தகைய கதாபாத்திரத்தையும் அருமையாக செய்யக்கூடிய ஒரு ஆல்ரவுண்டர்... சம்சாரம் அது மின்சாரம் படத்தில் வேலைக்கு போகும் ஒரு நடுத்தர குடும்ப தலைவனாக நடித்திருப்பார் .... முகவரி படத்தில் ஒரு பொறுப்புள்ள அண்ணனாக நடித்திருப்பார் ...

    ரெட் படத்தில் அஜீத் இருக்கும் இடம் மதுரை என்பதை கெஸ் பண்ணி சொல்லும்போது ஒரு வசனம் பேசுவார் ... " குதிரைகளின் குழம்படி , புலவர்களின் சொல்லடி ... மதுரதான்யா".... அந்த மாடுலேஷன் அவரால் மட்டுமே முடியும் .... அவரை பற்றி இன்னும் நிறைய சொல்லலாம் நண்பரே ..

    பதிலளிநீக்கு
  4. ரகுவரன் தமிழ்த் திரைப்படத் துறைக்குக் கிடைத்த பொக்கிஷம்..

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா21 ஜூலை, 2011 11:43

    raguwaran entha vedathil nadithathil kurai erukkum enru ethuwarai solla mudi yathavar nadikar thilakathittku piraku oru sirantha nadikar

    பதிலளிநீக்கு
  6. Anjali film u can see a real father .
    He was acting teacher for Vijay.He told in a interview he told that he would care ful when he act with Raguvaran.

    பதிலளிநீக்கு
  7. He is good villan and charecter artist...yes we and tamil cinima miss him alot....

    பதிலளிநீக்கு
  8. ரகுவரனின் நடிப்பை அவருடைய இடத்தை நிரப்ப இன்னும் யாரும் வரவில்லை.....

    பதிலளிநீக்கு
  9. boss,

    i will accept everything except what u say about rajini's acting?????????????????????????

    பதிலளிநீக்கு
  10. எனக்கும் ரகுவரனின் நடிப்பை ரோம்ப பிடிக்கும்

    பதிலளிநீக்கு
  11. பகிர்வுக்குப்பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  12. ரகுவரன் ேபான்ற நகடிகர் இனி பிறந்து வந்தால் உண்டு, நல்ல குணசி்த்திரம் வில்லன் ேரால் எல்லாம் அவரால் மட்டும் முடியும், சம்சாரம் அது மின்சாரம் முதல்வன் இரண்டும் மிகச் சிறந்த படங்கள்,

    பதிலளிநீக்கு
  13. ரகுவரனின் இழப்பு தமிழ் சினிமாவால் ஈடு செய்ய முடியாத இழப்பு. ரகுவரனின் தீவிர ரசிகன் நான்... தமிழ்மணத்துல ஓட்டும் போட்டாச்சு....

    பதிலளிநீக்கு
  14. Pathivukku nandri... Thottasinunki endra padathai vittu vitteergal... Athilum raguvaran pinniyeduthiruppaar....

    பதிலளிநீக்கு
  15. naan mudhan mudali raguvaranai paarthadu samsaaram adhu minsaaram padathil dhan. Appode naan yellaridamum sonnen evar thamil thirai vulagil oru round varuvaar yendru. By jaya kumar

    பதிலளிநீக்கு