கலை ஞானி கமல்ஹாசனின் James bond type படம் தான் 'விக்ரம்'. தூக்கு தண்டனை கைதிகளை விடுவிக்ககோரி ஸ்ரீஹரிகோட்டாவில் தயாராகும் ஏவுகணையை கடத்துகிறது சத்யராஜ் கும்பல். காணாமல் போன ஏவுகணையை ஏழு நாட்களுக்குள் செயலிழக்க செய்யவும், சத்யராஜ் கும்பலை அழிக்கவும் இந்திய அரசு கமலை அனுப்புகிறது. அவர் ஏவுகணையை
கண்டுபிடித்தாரா? அதை செயலிழக்க செய்தாரா? சத்யராஜ் கும்பலை அழித்தாரா? என்பதே படத்தின் கதை.
கண்டுபிடித்தாரா? அதை செயலிழக்க செய்தாரா? சத்யராஜ் கும்பலை அழித்தாரா? என்பதே படத்தின் கதை.
உலகநாயகன் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பில் முதன்முதலில் அதிக பொருட்செலவு செய்து, பிரம்மாண்டமாக எடுத்த படம் இது. டிம்பிள் கபாடியா, Sholay புகழ் அம்ஜத் கான், வசனகர்த்தா சுஜாதா என்று மிகபெரிய கூட்டணியில் வெளிவந்த படமும் இது தான்.படத்தின் ஆரம்பகாட்சிகள் கமலின் வித்தியாசமான திரைக்கதையோடு தொடங்குகிறது. படத்தின் ஆரம்பத்திலேயே டைட்டில் போட்டு முதல் காட்சி ஆரம்பமாவதை மாற்றி, முதல் இரண்டு நிமிட காட்சிக்கு பிறகு டைட்டில் போட்டது புதுசு. கமல் இந்த படத்தில் RAW அமைப்பு உளவாளியாக வருகிறார். அவருக்கு முன்று ஜோடிகள். அம்பிகா, லிசி மற்றும் டிம்பிள் கபாடியா. ராக்கெட் கடத்தலுக்கு பின் வரும் கமல் அம்பிகா ஜோடி காதல் காட்சிகள் அருமை. அதே சமயம், குண்டடிபட்டு அம்பிகா இறந்த பிறகு கமல் அவரது உயரதிகாரியை (சாருஹாசன்) சந்தித்து 'There is a Leaque in this Office. அவனை கண்டுபுடிச்சி, அவனுக்கு மயக்கமருந்தே இல்லாம கருத்தடை Operation பண்ணனும்' என்று சொல்லும் இடம் ஜோர். Scientist பிரீதியாக வரும் லிசி ஆரம்பத்தில் கமலிடம் எகிறிகொண்டும், பின்பு கமலை காதலிக்கவும் செய்கிறார். சலாமியா இளவரசியாக வரும் டிம்பிளுக்கு அதிக Scope இல்லையென்றாலும், ஒரு பாடல் கொடுத்து அதை சரிசெய்து விட்டார்கள். சுகிர்தராஜாவாக வரும் சத்யராஜ் வழக்கம் போல கலக்குகிறார். 'அடிச்சிட்டாயா, இது ஒன்னு போதும் இவளை கற்பழிகரத்துக்கு' என்று பல இடங்களில் சிக்ஸர் அடிக்கிறார். 'அரே ஒ சம்போ' என்று Sholay படத்தில் கதிகலங்கடித்த அம்ஜத் கானை சலாமியா நாட்டு அரசராக வந்து காமெடி பண்ண வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த படத்தில் இவரின் காட்சிகள் குறைவு என்றாலும், கொடுத்த வேடத்தை சிறப்பாக செய்திருக்கிறார். படத்தை முழுமையாக ஆட்கொள்வது கமல் மட்டுமே. படத்துக்கு மிகப்பெரிய பலம், இளையராஜாவின் இசையும் பாடல்களும் தான்.
1986 ஜனவரி 15'ஆம் தேதி, பொங்கலன்று விக்ரம் திரைப்படம் வெளிவந்தது. மிகுந்த எதிர்பார்போடு வெளிவந்த இந்த படம், ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்தது. அதனால் இந்த படம் கமலின் தோல்வி படங்கள் வரிசையில் சேர்ந்து கொண்டது. அதற்கு காரணம், உலகநாயகன் கமல்ஹாசனின் அவசரபுத்தி தான். ஏனென்றால் இந்த படத்தின் திரைக்கதையும், வசனமும் அன்றைய பார்வையாளர்களுக்கு புரியவில்லை. இதே படத்தை 2005'க்கு பிறகு எடுத்திருந்தால், கண்டிப்பாக பாக்ஸ் ஆபீசை கலக்கியிருக்கும். Because கமலின் படங்களான குணா, அன்பே சிவம், குருதிபுனல் என்று பல படங்கள் வர்தகரிதியாக வெற்றிபெறவில்லை என்றாலும், அவை சிறந்த படங்கள் என்று பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கமல் சிறந்த படைப்பாளி. சினிமாவில் புதிய விஷயங்களை யாருக்காகவும், எதற்காகவும் காத்திருக்காமல் உடனே செய்து பார்ப்பவர். அது தான் அவரின் அவசரபுத்தி. இந்த படத்தை இயக்கியது ராஜசேகர். படத்தின் பெரிய Minus, பாலைவனத்தில் பாம்பு கடிபட்டு நெடுநேரம் கழித்து ஹீரோ உயிர் பிழைப்பது கொஞ்சம் ஓவராஇல்ல? ஆனால் இப்போதும் இந்த படத்தை TV'ல் போட்டால், அனைவரும் (குறிப்பாக இன்றைய Jeneration) ரசித்து பார்பார்கள். இது போன்ற Jamesbond Style படத்தை நம்மை போன்ற ஏராளமான ரசிகர்கள் இன்றைய ஹீரோக்களிடம் எதிர்பார்கிறார்கள். செய்வார்களா நம் ஹீரோக்கள்...?
kitta thatta 26 varudangal kazhithu intha padathai patri pativu paarkumbothu mei silirkuthu. Kamal is always ahead of his time. James bond padathodu ithai compare panna koodathu since their budget and market is big . but still this is one of the innovative film from kamal. there is a country called salamiya and their language all innovative ippa kooda neraya hollywood padangalal intha mathiri katranga it is sad that it didnt get its due
பதிலளிநீக்குஉங்க பிளாக் பக்கம் வந்ததில் இந்த விமர்சனம் கிடைத்தது...நான் இருந்தாலும் ரொம்ப லேட் பண்ணிட்டேன்.இவ்வளவு தாமதமாக பின்னூட்டம் அளிப்பதற்கு மன்னிக்கவும்.
பதிலளிநீக்குஇந்த படத்தை கடந்த மாதங்களில் பார்க்க வாய்ப்பு கிட்டியது.,இதுப்போன்ற கதையம்சத்தில் அந்த டைமில் படங்கள் வந்ததில்லை..கிராமத்தை பேஸ் பண்ணி வந்த படங்களின் வரிசையில் ஒரு சைன்ஸ் ஃபிக்சன், கிரைம் திரில்லராக விக்ரம் படத்தை எடுத்திருப்பார்கள்.விமர்சனம் அருமை..தந்தமைக்கு என் நன்றி.