அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், மே 27, 2019

தேர்தல் 2019...

டந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.க கூட்டணி இந்தியா முழுவதும் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளில் 350 தொகுதிகளுக்கு மேல் வென்று திரும்பவும் ஆட்சியமைத்துள்ளது. அதே போல தமிழகத்தில் நடந்து முடிந்த 22 இடைத்தேர்தலில் 13 இல் தி.மு.கவும், 9 இல் அ.தி.மு.கவும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அ.தி.மு.க அரசு இன்னும் இரண்டு வருடங்களுக்கு தொடர்ந்து ஆட்சியை தரவுள்ளது. தேர்தல் அறிவித்ததிலிருந்து, தேர்தல் முடிவுகள் அறிவித்தது வரை நடந்த கூத்துக்கள், களேபரங்கள், கணிப்புகள் என்று பல மக்களாகிய நாம் கண்கூடாக கண்டோம். அவற்றை பற்றிய தெளிவான அலசல்கள் இதோ...

தேர்தலுக்கு முந்தைய கலவரம்:
மக்களிடம் சம்பாதித்துள்ள அதிருப்தியை தாண்டி பெரிய அளவில் வெற்றிவாகை சூடவேண்டும் என்ற கட்டாயத்தில் பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க என்று மெகா கூட்டணியை அமைத்து களம் கண்டது அ.தி.மு.க. அதே போல கலைஞர் இல்லாத தி.மு.கவில் வி.சி.க, ம.தி.மு.க, காங்கிரஸ் என்று எதிர் கட்சிக்கு சளைக்காமல் கூட்டணி அமைத்து களம் கண்டார் ஸ்டாலின்.

வெள்ளி, பிப்ரவரி 23, 2018

Production No. 1975...

'ரெண்டு சின்ன பசங்க சார், இது ஜெயிக்கும்னு நானும், இதுவும் ஜெயிக்கும்னு அவரும் சொல்லிக்கிட்டு இருப்போம், அப்படி சொன்னது அன்னைக்கு முழுக்க எங்க மைண்ட்ல ஓடிக்கிட்டே இருந்துச்சி' - நடிகர் பிரகாஷ் ராஜ் தொகுத்து வழங்கிய 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சியில் பங்கேற்ற உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றியும் அவர்களின் இருவேறு சினிமா பாணி பற்றி விவாதித்ததை நிகழ்வில் பகிர்ந்து கொண்டார்.

செவ்வாய், டிசம்பர் 06, 2016

அம்மா...

அம்மா 1
அழுகை வரவில்லை எனக்கு, உங்கள் பூத உடலை காணும்வரை,

குரல் தழுதழுக்கவில்லை எனக்கு, உங்களை பற்றி பேசும் வரை.

ஞாயிறு, மே 15, 2011

2011 தேர்தல்கள முடிவுகள் - ஒரு அலசல்



அப்பாடா. ஒரு வழியாக தேர்தல் முடிவுகள் வந்துவிட்டது. அதிமுக கூட்டணி மொத்தம் 203 தொகுதிகளை கைப்பற்றியுள்ளனர். அதுவும் அதிமுக மட்டும் 146 தொகுதிகளை கைப்பற்றியிருப்பது சற்று பெரிய விஷயம் தான். அது போல கட்சி ஆரம்பித்து ஆறுவருடங்களில் சட்டசபை எதிர்கட்சியாக வளர்ந்துள்ள விஜயகாந்தின் தேமுதிக கட்சிக்கு என் வாழ்த்துக்கள்.

செவ்வாய், ஏப்ரல் 12, 2011

அறிஞர் அண்ணாவின் காலவரிசையும் & அண்ணாவுக்கு பிறகு திராவிட இயக்கங்களும் - ஒரு பார்வை

அண்ணாவின் காலவரிசை:

1909 - அண்ணா பிறப்பு (செப்டம்பர் 15 - காஞ்சிபுரம் - தந்தை நடராஜன், தாய் பங்காரு அம்மாள்).

1914 - காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் சேர்கிறார்.

1927 - காஞ்சி நகராட்சியில் எழுத்தராய் பணிபுரிகிறார்.

வெள்ளி, மார்ச் 18, 2011

அடுத்த முதல்வர் யார்? நேற்றைய தொடர்ச்சி...

கடந்த பதிவில் அதிமுகவை பற்றி சற்று விரிவாக சொல்லியிருந்தேன். இந்த பதிவில் திமுக, அதிமுக கட்சிகளின் நிலைப்பாடுகள் குறித்தும், யார் 2011 முதல்வர் என்பதையும் இப்போது விரிவாக பாப்போம்.

வியாழன், மார்ச் 17, 2011

அடுத்த முதல்வர் யார்? கலைஞரா? அம்மாவா? - ஒரு அலசல்

அரசியலை பற்றிய ஒரு பதிவை நான் நெடுநாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அதற்கு தக்க சமயம் என்று ஒன்று இருக்கிறதல்லவா? அதனால் தான் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நான் இதை எழுதுகிறேன். அதுமட்டுமல்ல, அரசியலை பற்றி என்னுடைய பார்வையை சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பதிவு.