செவ்வாய், பிப்ரவரி 23, 2016

எனக்கு பிடித்த புத்தகங்கள் 5 - எஸ். ராமகிருஷ்ணன், இந்திரா சௌந்தராஜன் & சுஜாதா எழுதியவை...

எனது இந்தியா - எஸ். ராமகிருஷ்ணன்:

இந்திய வரலாற்றுக் கல்வெட்டு! ஒரு தேசாந்திரியின் பார்வையில் இந்திய தேசம் குறித்த பதிவு இது.வரலாறு நிறைய நேரங்களில் கற்பனையின் பாதையிலும் அனுமானத்திலும் யூகிப்பிலுமே பதிவு செய்யப்படுகிற ஒன்றாகிவிட்டது. சுவாரஸ்யம் மிக்க வரலாறே உண்மை என்கிற கசப்பான காலகட்டத்தில்,சாலச் சிறந்த பார்வையோடு, உண்மையை மட்டுமே பதிவு செய்யும் சிரமமிகு தேடுதலோடு இந்திய வரலாற்றைக் காலக் கல்வெட்டாகப் படைத்திருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.இந்தியாவின் நான்கு திசைகளிலும் பயணித்தவராக,படித்தவராக,ஆவணங்கள் தொடங்கி ஆராய்ச்சிகள் வரை பகுத்துப் பார்த்தவராக ‘எனது இந்தியா’ தொடரை எஸ்.ராமகிருஷ்ணன் ஜூனியர் விகடனில் எழுதத் தொடங்கியபோது, அதன் உண்மையான சுவாரஸ்யத்திலும் வரலாற்று நிகழ்வறியும் பேராவலிலும் சொக்கிக் கிடந்தது வாசக வட்டம். ‘நீதி தேவதை’யை ஆரம்பப் புஷீமீளியாகக் கொண்டு இந்தியா சுதந்திரக் காற்றை சுவாசிக்கக் காரணமான மகாத்மாவின் கொலை வழக்கில் இருந்து தொடங்கிய எஸ்.ராமகிருஷ்ணன், நீதிக்கும் இந்திய வரலாற்றுக்கும் உள்ள தொடர்பை மொகலாயர் ஆட்சிக்காலத்தில் நடந்த சம்பவங்களோடு ஒப்பிட்டுக் காட்டி இருக்கிறார். மொகலாயர்களின் படையெடுப்பு, கஜினி முகமது 17 முறை படையெடுத்து இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடித்த அவலம்,மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் அரியணையைப் பிடிப்பதற்காக நடந்த சதிகள், நாடு பிடிக்கும் ஆசையில் நடந்த போர்கள், வளம் கொழித்து செல்வச் செழிப்போடு விளங்கிய இந்தியாவின் நிலை, வாஸ்கோடகாமாவின் வருகைக்குப் பின்னால் வணிகம் என்ற போர்வையில் இந்தியா சுரண்டப்பட்ட கோலம் என இந்திய வரலாற்றுச் சம்பவங்களை தெளிந்த நீரோடையின் ஓட்டமாகச் சொல்லி இருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி அதிகார மாற்றங்கள், மக்களின் வாழ்க்கை நிலை, கலாசாரம், பண்பாடுகளில் ஏற்பட்ட மாற்றம், மொகலாயர்கள் காலத்தில் இந்தியாவின் நிலை, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மக்கள் சந்தித்த கொடுமைகள், ஜாலியன் வாலாபாக் படுகொலை, தேசப் பிரிவினையின்போது நிகழ்ந்த வெறிச் செயல்களின் கோரத் தாண்டவம் என எண்ணிலடங்காத வரலாற்றுச் சம்பவங்களை எவ்வித விடுபடலுமின்றி இந்த நூல் பதிவு செளிணிதிருக்கிறது. இனம்,மொழி, இலக்கியம், மதம் என்று எல்லாவற்றையும் ஆராளிணிச்சிபூர்வமாக தொட்டிருக்கும் எஸ்.ராமகிருஷ்ணன், பல நூல்களின் மேற்கோள்களையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.இதுவரை கேள்விப்பட்டிராத சில பெயர்க் காரணங்களையும், அதற்கான வரலாற்று பின்னணிகளையும் இந்த நூல் அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறது. உதாரணமாக,சென்னையில் இன்றும் ‘ஐஸ் ஹவுஸ்’ என்று வழங்கப்படும் இடத்துக்கான வரலாற்றுப் பின்னணியைச் சொல்லலாம். இப்படிப் பல காலங்களில் இந்தியாவில் நிகழ்ந்த சரித்திரத்தின் சுவடுகளை ஒட்டுமொத்தமாக கவனத்துக்குக் கொண்டுவந்திருக்கும் இந்த நூல், இந்தியாவின் பூர்வீகத்தைத் தெளிவுபடுத்தும் பேரறிவுப் பெட்டகம். ‘திரிந்தவனே அறிந்தவன்’ என்பார்கள் கிராமப்புறங்களில். தேசாந்திரியாகத் திரிந்தவராக, தேசப் பின்னணியை அறிந்தவராக எஸ்.ராமகிருஷ்ணன் படைத்திருக்கும் இந்த நூல் அனைவரிடமும் இருக்க வேண்டிய பரம்பரைப் பத்தாயம்!

மறைக்கப்பட்ட இந்தியா - எஸ். ராமகிருஷ்ணன்:
 ஒரு வரலாற்று நிபுணர்கூட இத்தனை விஷயங்களை இவ்வளவு நேர்த்தியாகவும், இத்தனை கட்டமைப்போடும் இவ்வளவு உயரத்துக்கு, இவ்வளவு துல்லியமாக, முழுமையாக இந்த ‘மறைக்கப்பட்ட இந்தியா’வை நமக்கு காட்டியிருப்பாரா என்பது சந்தேகம்தான். அந்த அளவுக்கு வரலாற்று நிகழ்வுகளை உயிர்ப்பாகவும், வியப்பாகவும், மனிதாபிமானத் தோடும், சமூக அக்கறையோடும், சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கிறது. புத்தனைத் தேடிய பயணியாக சீன யாத்ரீகர் யுவான் சுவாங் இந்தியாவில் பயணித்ததில் தொடங்கி கல்விக்காக நூறு கிராமங்கள், நீண்டு செல்லும் சாலை, இந்தியப் பருத்தியின் அழிவு, ரகசிய ரேடியோ, பார்ஸி இனம், ஜந்தர் மந்தர், உமர் கய்யாம், நேதாஜியின் டோக்கியோ கேடட்ஸ், தாகூரின் கல்விமுறை, இண்டிகோ புரட்சி, அவுரியின் வீழ்ச்சி, மணமகனுக்கு வலைவீசிய கப்பல்கள், மொகலாய ஓவியங்கள், புகைப்படக் கலைஞர்கள், இந்தியாவில் ஆர்மீனியர்கள், வங்காள தேசம் உருவான கதை, காலிஸ்தான் வன்முறை, பஞ்சாபிகள் படுகொலை, காந்திக்கு முந்தைய மகாத்மா, கொடுங்கோல் ஜமீன்தார்கள் என்று வரலாற்றின் கால அடுக்கின் உள்ளே புதைத்து மறைத்திருக்கும் நிகழ்வுகளை தன் பேனா முனையால் வெளிக்கொண்டிருக்கும் எஸ்.ராமகிருஷ்ணனின் கனமான எழுத்து, உலகம் கொண்டாடப்பட வேண்டிய, கவனிக்கத்தக்க, பாதுகாக்க வேண்டிய படைப்பாக உள்ளது. எத்தனையோ பல நூற்றாண்டுகளை ஒரு சில வரிகளுக்குள் வார்த்திருக்கிறார். இவருடைய பல ஆண்டுகளின் உழைப்பு, பல்வேறு விதமான இழப்புகள், எழுதி சேகரித்து வைத்திருந்த குறிப்புகள் எல்லாம் சேர்ந்துதான் இந்த நூலை இவ்வளவு அழகாக எழுத வைத்திருக்கின்றன. கொஞ்சமும் கூட்டியோ குறைத்தோ கற்பனை கலந்து எழுதாமல் உண்மையான வரலாற்று நிகழ்வுகளுக்குள் வாழ்ந்தவர்களைப்போல் நம்மை ஊடுருவி வரச் செய்திருக்கிறது எஸ்.ராமகிருஷ்ணனின் இயல்பான எழுத்து நடை. தமிழில் இப்படி ஒரு நூல் இதுவரை வரவில்லை என்றே சொல்லலாம். சுதந்திரத்துக்காக ரகசிய ரேடியோ நடத்தி சித்திரவதை செய்யப்பட்ட உஷா மேத்தா, நேதாஜியின் கடைசிப் பயணம், ஆர்மீனியர்களின் அமைதி, வங்க தேசத்தின் முஜிபுர் ரஹ்மான், மகாத்மா ஜோதிராவ் புலே, யவனர்கள், ஜப்பானில் போராடிய நாயர் ஸான், லண்டனில் போராடிய வீரேந்திரநாத் சட்டோபாத்யாய ஆகியவர்களின் பல அரிதான தகவல்களும் இந்த நூலில் விரவிக்கிடக்கின்றன. ஜூனியர் விகடனில் ‘எனது இந்தியா’ தொடராக வரும்போதே பரவலான கவனத்துக்கு உள்ளான இந்த ‘மறைக்கப்பட்ட இந்தியா’ நூல், நவரத்தினங்கள் நிரம்பிய வரலாற்றின் தங்கப் புதையல்!

விட்டுவிடு கருப்பா - இந்திரா சௌந்தராஜன்:
கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு முன் டிவி சீரியலாக வெளிவந்த 'மர்மதேசம்: விடாது கருப்பு' கதையின் நாவல் வடிவம் இந்த விட்டுவிடு கருப்பா. சிறுவயதில் நான் விடாது கருப்பு தொடரை சரிவர பார்த்ததில்லை. காரணம், அப்போது எங்கள் வீட்டில் கேபிள் வசதி இல்லை. என் பெரியம்மா வீட்டில் தங்கியிருந்த சில நாட்களில் சில எபிசோடுகளை பார்த்திருக்கிறேன். அதுவும் பயத்தோடு. சமீபமாகத்தான் முழு சீரியலையும் பார்த்தேன். மிக அருமையாக இருந்தது. ஆனால் நாவலை படித்தபோது சீரியலுக்கும், நாவலுக்கும் நிறைய வித்தியாசங்கள். எனக்கு தெரிந்து நாவலை விட சீரியலே சிறந்தது என்று தான் சொல்வேன். சீரியலில் நாகாவின் இயக்கம் மிக சிறப்பாக இருந்தது. குறிப்பாக 'யார் அந்த கருப்பு?' என்று தெரியவருமிடம், செம.

ஆஸ்டின் இல்லம் - சுஜாதா:
சுஜாதாவின் எழுத்தில் வந்த 'குடும்ப விழிப்புணர்வு' கதை. ஒரு வசதியான கூட்டு குடும்பம். அந்த குடும்பத்தின் தலைவர் போல 'ஆஸ்டின் பெரியப்பா', பொறுப்பாகக் குடும்பத்தையும் வியாபாரத்தையும் கவனித்துக்கொள்ளும் முகுந்தன், ஒரு புதிரான நோய்க்கு ஆளாகும் அவர் மகன் சிறுவன் நந்து, பொறுப்பில்லாமல் குடிகாரனாகத் திரியும் சிவா, அமேரிக்கா போகத் துடிக்கிற நிகில், அவனை காதலிக்கும் முறைப்பெண் நித்யா. இப்படி ஒரு சிறிய குறுநாவலில் ஏராளமான பாத்திரங்கள். ஆனால் கொஞ்சம்கூட அலுப்புத் தட்டாத கதை ஓட்டம். கதையின் சாரம்சம், ரத்த உறவு முறையில் திருமணம் தவறு என்பது தான். ஆனால் அதை விதம், மிகவும் அருமை. Infact, அது தான் சுஜாதா ஸ்டைலும் கூட.



Thanks and Regards,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக